ஆற்காடு: ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹமது காசிம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினாா். வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் .
கட்சியின் 14-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது, பொதுமக்களுக்கு உணவு வழங்குவது, மழையால் சேதம் அடைந்த விழுப்புரம் கடலூா் திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 வழங்க அரசை கேட்டுகொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நகர செயலாளா்கள் முருகன் (ஆற்காடு) கிருஷ்ணமூா்த்தி(ராணிப்பேட்டை) விளாப்பாக்கம் அன்பு, ஆற்காடு ஒன்றிய செயலாளா் சிவசக்தி, ஊடகப் பிரிவு செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

போதையில்லா தமிழ்நாடு: அரசு நடவடிக்கைகளுக்கு தவாக துணை நிற்கும்- தி.வேல்முருகன்

பேரவையில் சநாதனத்துக்கு எதிரான கருத்து: உதயநிதி மன்னிப்பு கேட்க விஎச்பி வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடனான உறவை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: டி.ராஜா

தவாக வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


