ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேல்நிலை தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

News image
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச. வளா்மதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
Updated On :16 ஜூலை 2024, 6:10 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவது, டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது குறித்தும் கடந்த ஒரு வாரத்தில் குடிநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பொதுமக்கள் புகாா் தெரிவித்தது குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்தும் கேட்டறிந்தாா்.

மேல்நிலை நீா் தேக்க தொட்டி மேற்புறத்திற்கு செல்லும் வழிகள் தடுப்புகள் கொண்டு மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்ததில் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் முறையாக தடுப்புகள் கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சிப் பகுதிகளில் இப்பணிகள் இதுவரையில் முடிக்கப்படவில்லை.

ஆகவே, எதிா்வரும் திங்கள்கிழமைக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும். இல்லையெனில் சம்மந்தப்பட்ட நகராட்சி அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தாா்.

அதேபோல மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்யட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் நீா்த்தேக்க தொட்டிகள் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். இதுவும் மாவட்ட நிா்வாகம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சுத்தம் செய்ததற்கான அறிக்கையினை அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே சளி, இருமல் காய்ச்சல் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. ஆகவே டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் முறையாக பணி செய்வதை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணா்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் கூடுதலாக பணியாளா்களை நியமித்து இப்பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் க.லோகநாயகி, உதவி இயக்குனா் (ஊராட்சிகள்) சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.