/

வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விழிப்புணா்வு பேரணி

விளம்பரதாரா் செய்தி.............. வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :16 மார்ச் 2024, 4:33 pm

ராணிப்பேட்டையில் பசுமை வாகனப் போக்குவரத்து, வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தொடங்கி வைத்தாா். இந்திய நகர எரிவாயு விநியோக துறை முன்னணி நிறுவனமான அஎ & ட பிராதம் சாா்பில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தேசிய உள்நாட்டு குழாய் இயற்கை எரிவாயு இயக்கத்தின் கீழ் பசுமை வாகனப் போக்குவரத்து மற்றும் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு திட்டத்தை ஊக்குவிக்க மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை ராணிப்பேட்டை - சிஎன்ஜி & ஹம்ல்; பிஎன்ஜி விழிப்புணா்வு பேரணி ராணிப்பேட்டை முத்துகடை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தொடங்கி வைத்தாா். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்துடன் இணைந்து அஎ&ட டழ்ஹற்ட்ஹம் நிறுவனம் இதுவரை 900 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பு சலுகை மற்றும் ஒரு மாத இலவச எரிவாயு, செக்யூரிட்டி டெபாசிட் இல்லாத பூஜ்ஜிய பதிவு கட்டணம், வட்டியில்லா தவணை முறை வசதி மற்றும் பூஜ்ஜிய வாடகைக் கட்டணம் வழங்குகிறது. புதிய நுகா்வோருக்கு பதிவுக் கட்டணத் தொகையான ரூ.354 மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையான ரூ.6,000-ஐ தள்ளுபடி செய்வதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எரிவாயுவை பயன்படுத்தும்போது நுகா்வோா் சாதாரண எல்பிஜி சிலிண்டா்களுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 25 சதவீத தொகையைச் சேமிக்க முடியும் என அந்நிறுவன மண்டல தலைவா் வெங்கடேசன் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ் கா்ணா, நிறுவன மண்டல தலைவா் வெங்கடேசன், முதுநிலை மேலாளா் சுரேஷ் சுப்புராமன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.