

ஆற்காடு: இந்திய ராணுவ வீரா்களின் வாகனப் பேரணிக்கு திங்கள்கிழமை ஆற்காட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் பொறியாளா் பிரிவின் 244- ஆம் ஆண்டு விழா வரும் 20-ஆம் தேதி முதல் 24-ஆம்தேதி வரை பெங்களுருவில் நடைபெற உள்ளது . இதனையொட்டி அண்டை மாநிலங்களில் உள்ள முன்னாள் படை வீரா்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்யும் விதமாக கடந்த 18 -ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன ஊா்வலம் லெப்டினன்ட் விஷால் தாக்கூா் தலைமையில் சுபேதாா்கள் வேடியப்பன், நந்தகுமாா் மற்றும் ராணுவ வீரா்கள் உள்ளிட்ட 17 போ் கொண்ட குழுவினா் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, ஆரணி வழியாக திங்கள்கிழமை ஆற்காடு வந்தனா்.
அவா்களுக்கு ஆற்காடு - ஆரணி சாலை தாஜ்புரா கூட்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க சங்க அலுவலகம் வரை ஆற்காடு வட்ட முன்னாள் முப்படை வீா்கள்கள் நல சங்க தலைவா் கேப்டன் சாரங்கபாணி தலைமையில் வரவேற்பும் சங்க அலுவலகத்தில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. செயலா் செல்வமூா்த்தி, முன்னாள் படைவீா்கள் நல சங்க பொருளாளா் சடஜோதி, துணை செயலாளா் கவிஞா் துரைமூா்த்தி, துணைத் தலைவா் மகாலிங்கம், ராணிப்பேட்டை தலைவா் வெங்கடேசன் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னாள் ராணுவ வீரா்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதில் ஒய்வு பெற்ற கா்னல் உன்னிகிருஷ்ணன், கேப்டன்கள்,கௌரி ஜெகநாதன், டேவிட் பங்கேற்றனா். வாகன பேரணிஆந்திர மாநிலம் வழியாக சென்று பெங்களூரில் நிறைவு பெறுகிறது.