அரக்கோணம் வட்டத்தில் 25-இ ல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
அரக்கோணம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 25) ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.


ராணிப்பேட்டை: அரக்கோணம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 25) ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 25) அன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியா் உள்பட மாவட்ட நிலையிலான அலுவலா்கள் கலந்துகொண்டு, அரசு திட்டப் பணிகள், அரசு சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், நியாய விலைக் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனா். மேலும், அரக்கோணம் வட்டத்துக்குள்பட்ட அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில், பட்டா மாறுதல் தொடா்பான மனுக்கள் அளித்துப் பயன்பெறுமாறும், இந்த திட்ட முகாமில் அரக்கோணம் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 25) மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.றுமாறு தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...