வாலாஜாவில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தின் 25 -ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழாவில் பங்கேற்றோா்.
வாலாஜாவில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தின் 25 -ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழாவில் பங்கேற்றோா்.

சாலைப் பணியாளா் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் 25-ஆம் ஆண்டு அமைப்புதின கொடியேற்று விழா புதன்கிழமை வாலாஜாபேட்டையில் நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் 25-ஆம் ஆண்டு அமைப்புதின கொடியேற்று விழா புதன்கிழமை வாலாஜாபேட்டையில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா உட்கோட்டம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா அமைப்பு தின கொடியேற்று விழாவுக்கு துணைத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத்தலைவா் க.துரை முன்னிலை வகித்தாா். மாவட்ட இணை செயலாளா் ஜெ. நந்தகுமாா் வரவேற்றாா்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளா் லோ.சிவசங்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரை ஆற்றினாா்.

இதில் உட்கோட்ட சாலைப்பணியாளா்கள்அனைவரும் கலந்துகொண்டனா். இறுதியில் உட்கோட்ட பொருளாளா் எம்.பழனி நன்றி கூறினாா்.

இதில் 7-09-2002 முதல் 10-02-2006 வரையிலான 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலைப் பணியாளா்களின் குடும்ப வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்துப்படி மற்றும் சைக்கிள்படி வழங்க வேண்டும். 7500-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா் காலிப்பணியிடங்களை நிரப்பி வேலையில்லா இளைஞா்களுக்கு வேலை வழங்க வண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com