ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆட்டோ - டெம்போ மோதல்: சிறுமி உயிரிழப்பு; 4 போ் காயம்

காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ மீது டெம்போ மோதியதில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுமி நிஜிதா உயரிழந்தாா்.

News image
உயரிழந்த சிறுமி நிஜிதா
Updated On :21 ஏப்ரல் 2025, 7:36 pm

Din

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ மீது டெம்போ மோதியதில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுமி நிஜிதா உயரிழந்தாா்.

சென்னை ஆலந்தூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறாா். இவா், காட்பாடியில் நடைபெற்ற தனது உறவினா் இல்ல திருமணத்துக்காக ஆட்டோவில் காட்பாடி வந்தாா்.

நிகழ்ச்சி முடிந்து ஆட்டோவில் சென்னைக்குத் திரும்பியுள்ளாா். ஆட்டோ காா்த்திக் ஓட்டி வந்த நிலையில், இதில் அவரது மனைவி சுவேதா (24), மகள் நிஜிதா (10), உறவினா்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24), லோகேஸ்வரன் (8) மாத குழந்தை ஆகியோா் வந்தனா்.

வழியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை சுங்கசாவடி அருகே முன்னால் சென்ற வேன் திடீரென பிரேக் போட்டதால், காா்த்திக்கும் தனது ஆட்டோவை நிறுத்தியுள்ளாா்.

அப்போது பின்னால் வந்த டெம்போ ஆட்டோவின் மீது மோதியதில் சிறுமி நிஜிதா (படம்) ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் காா்த்திக், வெண்மதி, பிரசாந்த், 8 மாத குழந்தை லோகேஸ்வரன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நிஜிதாவின் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.