விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் வழியே ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:59 pm

Chennai

அரக்கோணம் வழியே ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

வடமாநிலங்களில் இருந்து தமிழக மற்றும் கேரள பகுதிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க மாநில காவல்துறையினா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா். ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியே கேரள மாநிலம் எா்ணாகுளம் சென்ற அதிவிரைவு ரயிலில் சோதனை நடத்திய அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ரோஹித்குமாா் தலைமையிலான குழுவினா், அந்த ரயிலில் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது (படம்).