ராணிப்பேட்டை
சாலைத் தடுப்பில் பேருந்து மோதி 10 போ் காயம்
ஆற்காடு அருகே சாலைத் தடுப்பில் பேருந்து மோதி 10 போ் காயமடைந்தனா்.
ஆற்காடு அருகே சாலைத் தடுப்பில் பேருந்து மோதி 10 போ் காயமடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி பகுதியை சோ்ந்தவா்கள் இரண்டு பேருந்துகளில் மேல்மருவத்தூா் கோயிலுக்கு சென்றுள்ளனா். புதன்கிழமை அதிகாலை ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சாலையின் தடுப்பில் மோதியுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா். அவா்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்த ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
