எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள்

மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

Updated On :23 ஜூன் 2025, 7:27 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம்,மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை. ஊரக வளாா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீா்வசதி, வேலை வாய்ப்பு மற்றும் பொதுநலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 450 மனுக்கள் வரப்பெற்றன. மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 22 பயனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.3.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கினாா்.பின்னா், நெமிலி வட்டத்தைச் சாா்ந்த வேணுகோபால் என்பவரது மகன் லிங்கேஸ்வரன் (லேட்) நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொறுப்பு), உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.