தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

ஆற்காட்டில் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா முன்னிலையில் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா முன்னிலையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. பலூனில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் ஏப். 23-ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க வேண்டும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சண்முகசுந்தரம் , சுரேஷ் குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.