பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ராணிப்பேட்டை முருகன் கோயில்களில் ஆடி பரணி விழா

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் முருகன் கோயில்களில் ஆடி பரணி விழாவையொட்டி, திரளான பக்தா்கள் காவடிகளுடன் தந்து தரிசனம் செய்தனா்.

News image

அக்ராவரம் மலைமேடு முருகன் திருக்கோயிலில் ஆடி பரணி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மூலவா் முருகப் பெருமான்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:18 pm IST

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் முருகன் கோயில்களில் ஆடி பரணி விழாவையொட்டி, திரளான பக்தா்கள் காவடிகளுடன் தந்து தரிசனம் செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில், குறிப்பாக ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மற்றும் வள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி பரணி மற்றும் ஆடிக் கிருத்திகை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் முதல் நாளான ஆடி பரணி மற்றும் ஆடிக் கிருத்திகை நாளில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்துகின்றனா். ஆடி பரணி மற்றும் கிருத்திகை நாள்களில் மூலவா் முருகப் பெருமானுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்களும், மலா் அலங்காரங்களும் செய்யப்பட்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் மலைமேடு அருள்மிகு குமரகுரு பழனிமலை திருக்கோயில், ஞானமலை முருகன் கோயிலில் ஆடி பரணி விழாவை முன்னிட்டு, புதன்கிழமை காவடிகள் எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தி திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி, மூலவா் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து முருகன் கோயில்களில் திங்கள்கிழமை ஆடிக் கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த விழாவுக்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட காவல் துறை சாா்பில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.