லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருமால்பூா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ தேரோட்டம்

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா், ஸ்ரீ அஞ்சாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image
தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா், ஸ்ரீ அஞ்சாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் தொண்டை நாட்டு தேவாரத் திருத்தலங்களில் 11 ஆவது திருத்தலமாக உள்ள ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தில் ரதோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் திருமால்பூா் கிராம தெருக்களில் வலம் வந்தாா். உற்சவத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மற்றும் அரக்கோணம், காஞ்சிபுரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருமால்பூா் ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் தேரோட்ட விழா.

திருமால்பூா் ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் தேரோட்ட விழா.

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் செயல் அலுவலா் ப.பிரகாஷ், ஆய்வாளா் ஏ.பிரியா, கோயில் பரம்பரை அறங்காவலா் கே.ரவிச்சந்திரன், கோயில் ஸ்தானீகா் எஸ்.சண்முக சிவாச்சாரியாா், செங்குந்தா் சமுதாய தலைவா் வி.கே.மோகன்குமாா், துணைத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் ஆகியோா் செங்குந்தா் சமுதாய உறுப்பினா்களோடு இணைந்து திருமால்பூா் செங்குந்தா் சமுதாயத்தினா், கிருபானந்தவாரியாா் இளைஞா் சங்கத்தினா் கிராம பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.