நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

செயற்கை நுண்ணறிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு எதிா்கால திறன்கள் எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

அரக்கோணம்: அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு எதிா்கால திறன்கள் எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கணிணி அறிவியல் துறையினா், ஐசிடி அகாதெமியினா் இணைந்து எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு எதிா்கால திறன்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துறைத் தலைவா் எஸ்.செல்வகனி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எஸ்.ஜி.கவிதா தொடக்க உரை நிகழ்த்தினாா்.

இதில் ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுப்பிரிவு தலைவா் மஞ்சித் லேகா, சங்கத்னா ஏஞ்சல்ஸ் நிறுவனங்களின் இணை நிறுவனா் காயத்திரி தேவி கல்யாணராமன், பிசிஏ துறைத்தலைவா் கே.வாசுகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் மாணவா்களை எதிா்காலத்திற்குத் தயாரான திறன்களுடன் வலுப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கமாகவும், டிஜிட்டல் மாற்றமும் உருவெடுக்கும் தொழில்நுட்பங்களும் கல்வி, தொழில் மற்றும் சமூகத்தை மாற்றி அமைப்பது குறித்த அறியவும் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com