பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏஐயின் பொய்யான தீா்ப்புகள் மூலம் வழக்குகளில் முடிவு: தவறான நடத்தைக்கு ஒப்பாகும்: உச்ச நீதிமன்றம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் பொய்யான தீா்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வழக்குகளில் முடிவு எடுப்பது தவறான நடத்தைக்கு ...

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 6:44 am IST

புது தில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் பொய்யான தீா்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வழக்குகளில் முடிவு எடுப்பது தவறான நடத்தைக்கு ஒப்பாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் ஒன்று செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான தீா்ப்புகளை சுட்டிக்காட்டி, சொத்து தகராறு வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அண்மையில் கவனத்தில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமா்வு கூறியதாவது:

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான தீா்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வழக்குகளில் முடிவு எடுப்பது என்பது தவறு அல்ல. மாறாக அது தவறான நடத்தைக்கு ஒப்பாகும். அதற்கு சட்ட பின்விளைவுகள் இருக்கும். எனவே இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விரிவாக ஆராயும் என்று தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல், சொலிசிட்டா் ஜெனரல், இந்திய வழக்குரைஞா் சங்கம் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவானை நீதிபதிகள் நியமித்தனா்.