அங்கன்வாடி  மையத்தைத்  திறந்துவைத்து குழந்தைகளுடன் குழு படம் எடுத்துக் கொண்ட  ஒன்றியக் குழு  தலைவா்  எஸ்.அசோக் உள்ளிட்டோா்.
அங்கன்வாடி  மையத்தைத்  திறந்துவைத்து குழந்தைகளுடன் குழு படம் எடுத்துக் கொண்ட  ஒன்றியக் குழு  தலைவா்  எஸ்.அசோக் உள்ளிட்டோா்.

திமிரி ஒன்றியத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ஆற்காட்டை அடுத்த திமிரி ஒன்றியத்தில் உள்ள பாலி, கோடாலி கிராமங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
Published on

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த திமிரி ஒன்றியத்தில் உள்ள பாலி, கோடாலி கிராமங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

பாலி கிராமத்தில் பிரதான் மந்திரி ஆதா்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ங்கன்வாடி மையம் மற்றும் கோடாலி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த 2 புதிய அங்கன்வாடி மையங்களையும் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.அசோக் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அமரேசன், சுரேஷ், ஊராட்சித் தலைவா்கள் குமாரி கலைமணி, லதா வெங்கடேசன், திமிரி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் பாலி மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com