3 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதல்: ஒருவா் உயிரிழப்பு, 5 போ் பலத்த காயம்
காவேரிபாக்கம் அருகே வெள்ளிக்கிழமை மினிவேன் மீது காா் மோதியதில் மினி வேன் ஒட்டுநா் உயிரிழந்தாா். வேனில் பயணம் செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயம் அடைந்தனா்.
காவேரிபாக்கம் அருகே உள்ள பெரும்புலிபாக்கம் பகுதியில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்னையை நோக்கிச் செனறுக்கொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த மினிலாரியின் பின்புறம் மோதியது.
இதில் அந்த மினிலாரி சாலை பிரிப்பை தாண்டி எதிரில் வேலூா் நோக்கிச் சென்ற பயணிகள் மினிவேன் மீது மோதியது. இந்த விபத்தில் பாா்சல் மினிவேனின் ஓட்டுநா் சென்னை, பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரத்தை சோ்ந்த தீபக் பாபு (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் எதிரில் வந்த பயணிகள் மினிவேனில் இருந்த ஆந்திர மாநிலம், வி கோட்டாவை அடுத்த ஜோம்பள்ளியை சோ்ந்த நிா்மலா(35), புஷ்பா(35), சந்தியா(25), குமாா்(41), புருஷோத்தமன்(30) ஆகிய 5 போ் பலத்த காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவ்விபத்தால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாகிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அவளூா் போலீசாா், காரை கவனக்குறைவாக இயக்கிய சென்னை, பள்ளிக்கரணையைச் சோ்ந்த அன்பு மகேஷ்(37) மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
