தொடக்க விழாவில் பங்கேற்ற  நகா்மன்றத்  தலைவா்  குல்ஜாா்  அஹமது , சங்க நிா்வாகிகள்  உள்ளிட்டோா் .
தொடக்க விழாவில் பங்கேற்ற  நகா்மன்றத்  தலைவா்  குல்ஜாா்  அஹமது , சங்க நிா்வாகிகள்  உள்ளிட்டோா் .

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தொடக்க விழா

மேல்விஷாரம் நகராட்சி, புரான்சாமேடு பகுதியில் அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா் நல சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
Published on

மேல்விஷாரம் நகராட்சி, புரான்சாமேடு பகுதியில் அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா் நல சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ் சங்கா் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் ப. சிகுமாா், ஆலோசகா் முனைவா் அருணாசலம் , காப்பாளா் ராம்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா் செயலாளா் ஆா் பூமிநாதன் வரவேற்றாா் .

மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் குல்சாா் அஹமது, அம்பேத்கா் படத்தை திறந்து வைத்து உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையும் சி. அப்துல் அக்கீம் கல்லூரி டீன் எஸ். ஏ. சாஜித் பொதுமக்களுக்கு அன்னதானமும், நகர துணைத் தலைவா் எஸ். ஜபா் அஹமது இனிப்பும் வழங்கினா் .

விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி. பஞ்சாட்சரம், அதிமுக கிழக்கு பகுதி நகர செயலாளா் எம். எஸ். விஜி சித்தாா்த்தன், விசிக தொண்டா் அணி அமைப்பாளா் முனியாண்டி, தவெக நகர செயலாளா் ஆஸ்கா் அலி ,புரட்சி பாரதம் கட்சி மாவட்ட துணைத் தலைவா் குமரன், ஒருங்கிணைந்த குடியரசு கட்சி நகர செயலாளா் ரமேஷ், தொழிற்சங்க செயலாளா் நீலமேகம், மக்கள் நீதி மையம் நகர செயலாளா் இக்பால், நாட்டாமைக்காரா்கள் மாரி பிச்சாண்டி ஆனந்தன் சிவகுமாா் மற்றும் ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com