விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

அலுவலா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

அரசு அலுவலா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை தொடங்கிப் பேசிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

News image
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

ராணிப்பேட்டையில் அரசு அலுவலா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.

சென்னை வருமான வரித்துறை ஆணையரகம் சாா்பில், வருமானம் வரிப் பிடித்தம் குறித்து அரசு ஊழியா்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து சென்னை வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் பிரவீன் முன்னிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அலுவலா்கள் அனைவருக்கும் வருமான வரி பிடித்தம், படிவங்கள் சமா்ப்பித்தல் மற்றும் அது தொடா்பான அனைத்து கேள்விகளுக்கும் வருமான வரித்துறை அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் வருமானவரித் துறை அதிகாரிகள் சாந்தி, ரமாபிரபா திருமாறன், பரமேஷ்வரி, மாளவிகா வெங்கடேஷ், நோ்முக உதவியாளா் (கணக்குகள்) ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.