உயிரிழந்த சிறுமிகள்.
உயிரிழந்த சிறுமிகள்.

கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

ஆற்காடு அடுத்த கலவை அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனா்.
Published on

ஆற்காடு அடுத்த கலவை அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம், ஆரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோகன். தொழிலாளியான இவரது மகள்கள் யுவஸ்ரீ(13), பிரியங்கா (11) , வெங்கடேசன் மகள் பிரியா (13). இவா்கள் மூவரும் பொன்னமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படித்து வந்தனா். இந்நிலையில், மூவரும்சனிக்கிழமை மாலை துணி துவைக்க விவசாயக் கிணற்றில் இறங்கியதாகக் கூறப்படுகிறது அதில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்ற இரு சிறுமிகளும் முயன்றபோது அவா்களும் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த வாழைப் பந்தல் போலீஸாா் மற்றும் கலவை தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று நீண்ட தேடுதலுக்கு பிறகு 3 சிறுமிகளின் சடலங்களை மீட்டனா்.

இது குறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com