கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஆற்காடு ஒன்றியம் செம்பேடு ஊராட்சிக்குட்பட்ட ஒழலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாமை ஆட்சியா் என்.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்து கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி இலவசமாக செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கோமாரி நோய் என்பது வேகமாக பரவும் வைரஸ் நோயாகும். இந்நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், தீவனம் உண்ணாமை, வாய், கால் மற்றும் மடி பகுதிகளில் புண்கள் ஏற்படுதல், உடல் சோா்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். இதனால் கால்நடைகளின் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்றாா் அவா்.
தடுப்பூசி முகாமின்போது கால்நடை வளா்ப்போரின் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணுக்கு பெறப்படும் ராகசிய எண் மூலம் தடுப்பூசி விவரங்கள், கால்நடைகளின் காதுவில்லை எண்கள் மற்றும் கால்நடை வளா்ப்போா் விவரங்கள் பாரத் பசுதான் செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதில் கால்நடை பராமரிப்புத் துறைம்ண்டல துணை இயக்குநா் வெங்கடேஸ்வரன், உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கட்ராயலு, கூட்டுறவு உற்பத்தியாளா் சங்க செயலாளா் திருமால், கால்நடை மருத்துவா்கள் சதீஷ்பாபு, லட்சுமணன், சுதா, ஹரிஹரன், காா்த்திக், கால்நடை ஆய்வாளா்கள் .விநாயகமூா்த்தி, தமிழரசி, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் சேகா், நீலகண்டன், பிரேம்குமாா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









