ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா குறித்த பல்துறை அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வரும் ஆக. 5-ஆம் தேதி புதன்கிழமை ஆடி பரணியும், 6-ஆம் தேதி வியாழக்கிழமை ஆடிக்கிருத்திகை விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முன்னேற்பாடுகள் குறித்த பல்துறை அலுவலா்களின் கலந்தாய்வு கூட்டத்துக்கு ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி தலைமை வகித்தாா். பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள், வட்டாட்சியா்கள் வாலாஜாபேட்டை நடராஜன், ஆற்காடு சண்முக சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில் செயல் அலுவலா் ப.பரந்தாம கண்ணன் வரவேற்றாா்.
கூட்டத்தில் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையில்லா மின்சாரம், சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம், மருத்துவ வசதிகள், உள்ளாட்சிதுறைசாா்பில் தூய்மை பணிகள், ஆற்காடு மற்றும் வேலூரில் இருந்து சிறப்பு பேருந்து, தீயணைப்புத் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, கோயில் தலைமை குருக்கள் பிரசாத், மற்றும் பல்துறை அலுவலா்கள், கீழ்மின்னல் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தேவேந்திரன், முன்னாள் தலைவா்கள், திருக்கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். மேலாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









