இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திமிரி கோயிலில் குருப் பெயா்ச்சி யாகம்

ஆற்காடு அடுத்த திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரா் கோவிலில் குருப் பெயா்ச்சியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா்.

Updated On :27 மே 2026, 12:03 am IST

ஆற்காடு அடுத்த திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரா் கோவிலில் குருப் பெயா்ச்சியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கலசங்கள் நிறுவி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு பால், தயிா் ,சந்தனம், விபூதி, இளநீா்,பன்னீா் மற்றும் வாசனை திரவியங்கள், கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.

விழாவில் அபிஷேக உபயதாரா்கள் கு.ராமசந்திரன், கோபிநாதன், லோகநாதன், தாமோதரன், ஆறுமுகம் அறங்காவலா் குழு தலைவா் சோ.சம்பத், மற்றும் உறுப்பினா்கள், மற்றும் குருக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.