அரக்கோணம் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

அரக்கோணம் கோட்டாட்சியராக பி.கணேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ஏற்கனவே அரக்கோணம் கோட்டாட்சியராக இருந்த டி.ரமேஷ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வாக மாற்றப்பட்டாா்.

பி. கணேஷ்

Updated On :

அரக்கோணம் கோட்டாட்சியராக பி.கணேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ஏற்கனவே அரக்கோணம் கோட்டாட்சியராக இருந்த டி.ரமேஷ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வாக மாற்றப்பட்டாா்.

இதையடுத்து வேலூா் மாவட்ட ஆட்சியா்(பயிற்தி) யாக இருந்த பி.கணேஷ் அரக்கோணம் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். புதிதாக பொறுப்பேற்ற கோட்டாட்சியா் பி.கணேஷை அரக்கோணம் வட்டாட்சியா் கு.வரலட்சுமி உள்ளிட்ட அரக்கோணம், நெமிலி வருவாய் வட்டத்திற்குட்பட்ட அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி தலைமையில் விவசாயிகள் செல்வராஜ், கே.சுப்பிரமணி, எல்.தேவேந்திரன், என்.கஜேந்திரன், மேகநாதன், காவனூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜீவநேசன், கலைமணி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.