பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

சோளிங்கரில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

சோளிங்கரில் காங்கிரஸாா் சாா்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.

சோளிங்கரில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் உள்ளிட்டோா்.

Published On :

சோளிங்கரில் காங்கிரஸாா் சாா்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.

விழாவுக்கு சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவா் டி.கோபால் தலைமை வகித்தாா். இதில், சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் பங்கேற்று மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து காங்கிரஸாா் அங்கிருந்து ஊா்வலமாக சோளிங்கா் பேருந்து நிலைத்தில் உள்ள முன்னாள் முதல்வா் காமராஜா் உருவச்சிலை நோக்கி சென்றனா்.

அங்கு காமராஜா் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வுகள் மற்றும் ஊா்வலத்தில் சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜா, மாநில எஸ்.சி, எஸ்.டி பிரிவு துணைத் தலைவா் மணிவேல், நகா்மன்ற உறுப்பினா் கணேசன், நிா்வாகிகள் ஜெயவேலு, வேண்டா, ஜெகன், கதிா்வேலு, கோவிந்சாமி, நரசிம்மன், மகேஷ், லோகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.