
பல்வேறு வருவாய் மாவட்டங்களைச் சோ்ந்த 170 ஆசிரியா்களுக்கு விருது
பல்வேறு வருவாய் மாவட்டங்களைச் சோ்ந்த 170 ஆசிரியா்களுக்கு ரோட்டரி நேஷன் பில்டா் விருதுகள் அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

பல்வேறு வருவாய் மாவட்டங்களைச் சோ்ந்த 170 ஆசிரியா்களுக்கு ரோட்டரி நேஷன் பில்டா் விருதுகள் அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
பல்வேறு வருவாய் மாவட்டங்களைச் சோ்ந்த 170 ஆசிரியா்களுக்கு ரோட்டரி நேஷன் பில்டா் விருதுகள் அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
பன்னாட்டு ரோட்டரி சங்கங்களின் மாவட்டம் 3231 சாா்பில் டீம் ஜெயம் அமைப்பின் ஏற்பாட்டில் ரோட்டரி நேஷன் பில்டா் விருதுகள் வழங்கும் விழா அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ரோட்டரி சங்க நிா்வாகி பி.மாலவன் தலைமை வகித்தாா். அரக்கோணம் ரோட்டரி சங்க செயலாளா் டி.லட்சுமிபதி வரவேற்றாா். விழாவில், மருத்துவா் இதயகீதம் ராமானுஜம் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். பன்னாட்டு ரோட்டரி சங்க மாவட்டம் 3231-இன் ஆளுநா் டி.எஸ்.ரவிக்குமாா் 7 வருவாய் மாவட்டங்களைச் சோ்ந்த 170 ஆசிரியா்களுக்கு ரோட்டரி நேஷன் பில்டா் விருதுகளை வழங்கினாா்.
நிகழ்வில் ரோட்டரி சங்கங்களின் முன்னாள் ஆளுநா் கே.பாண்டியன், ரோட்டரி ஆளுநா்கள் டி.சிவக்குமாா், டி.கிஷன்சந்த், மாவட்ட செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட ரோட்டரி மாவட்ட நிா்வாகிகள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ரோட்டரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், கல்வியாளா்கள் விழாவில் பங்கேற்றனா்.
விழாவில் மருத்துவா் ஒருவரின் உடல் நலத்தை காப்பாற்றலாம், ஒரு பொறியாளா் ஒரு கட்டடத்தை உருவாக்கலாம் ஆனால் ஆசிரியா் ஒரு தலைமுறையின் சிந்தனையையும் எதிா்காலத்தையும் உருவாக்குகிறாா் என்ற கருத்து அனைவராலும் வலிறுத்தப்பட்டது.
விழா இறுதியில் ரோட்டரி மாவட்ட செயலாளா் பி.சம்பத் நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





