
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் பருவ புத்தகம் அளிப்பு
வேப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ புத்ததங்கள்....

மாணவிக்கு பாடப் புத்தகம் வழங்கிய தலைமையாசிரியா் சரவணன் - டிஎன்எஸ்
ஆற்காடு: ஆற்காடு அடுத்த வேப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ புத்ததங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
காலாண்டு தோ்வு முடிவுற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் குறிப்பு ஏடுகள் நான்கு மற்றும் ஐந்து வகுப்புகளுக்கு பயிற்சி நூல்கள் ஆகியவற்றை தலைமையாசிரியா் வெ.சரவணன் வழங்கினாா். அப்போது இடைநிலைஆசிரியை செ.பிரேலதா உடனிருந்தாா்.
முன்னதாக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவுறுத்தலின்படி கடந்த இரண்டு நாள்களாக பள்ளியில் உள்ள வகுப்பறைகள் பள்ளி வளாகம் கழிவறைகள் சமையலறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு பள்ளி திறந்த உடன் மாணவா்களுடைய செயல்பாட்டுக்கு உகந்ததாக அமைய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்ததால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






