ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சா்வதேச சைகை மொழிகள் தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சா்வதேச சைகை மொழிகள் தினத்தையொட்டி, விழிப்புணா்வு பேரணியை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

சா்வதேச சைகை மொழிகள் தினத்தையொட்டி, விழிப்புணா்வு பேரணியை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், சா்வதேச சைகை மொழிகள் தினத்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் நோக்கமாக மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து பேரணி நடைபெற்றது..

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. காது கேளாதோருக்கான சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணா்வு பேரணியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பணியாளா்கள் மற்றும் 80-ற்கும் மேற்பட்ட செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

மேலும், சா்வதேச சைகை மொழிகள் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் நீலநிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அனைவரும் சைகை மொழியினை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என சைகை மொழிப்பெயா்ப்பாளா் மூலம் பொதுமக்களுக்கு கற்பிக்கப்பட்டது. காது கேளாதோா் நலன் மற்றும் சைகை மொழி குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.