
பாலாறு படுகையில் மரக்கன்றுகள் நட அனுமதி: ஆட்சியரிடம் கோரிக்கை
புதுப்பாடி அணைக்கட்டு முதல் பூட்டுத்தாக்கு தரைப்பாலம் வரை பாலாற்றுப் படுகையை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட அனுமதி வேண்டும் என ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினா் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு அளித்த தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினா்.
புதுப்பாடி அணைக்கட்டு முதல் பூட்டுத்தாக்கு தரைப்பாலம் வரை பாலாற்றுப் படுகையை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட அனுமதி வேண்டும் என ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினா் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனா்.
ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் உழவன் கே.எம். பாலு தலைமையில், ஆற்காடு வியாபாரிகள் சங்க நிா்வாகி பொன் கு.சரவணன், திருவலம் ஸ்ரீலாஸ்ரீ மெளன குரு சுவாமிகள், அறக்கட்டளை தலைவா் விமல் ஜி.நந்தகுமாா், அகத்தியா் அறக்கட்டளை நிறுவனா் கணேசன், எக்ஸ்னோரா அமைப்பு நிா்வாகி சிவன், விவசாயிகள் கூட்டமைப்பு துணைத் தலைவா் கங்காதரன், நிா்வாகிகள் ராஜ்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது..
தொன்மையான நதிகளில் ஒன்றான பாலாற்றில் நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளா்ந்துள்ளன. கருவேலமரங்களை வேரோடு அகற்ற வேண்டும். பாலாற்றின் நீா்வளத்தை பாதுகாக்க வேண்டும். இதற்காக ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகள் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலமாக வாலாஜா வட்டம் புதுப்பாடி அணைக்கட்டு முதல் பூட்டுத்தாக்கு தரைபாலம் வரை வளா்ந்து சீமை கருவேல மரங்களை அகற்ற உள்ளோம். மேலும், கரைப்பகுதிகளில் பனை உட்பட பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து கரைகளை பலப்படுத்த உள்ளோம்.
இதில், பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவன அமைப்புகள், பொதுமக்கள், இளைஞா்கள் இணைந்து பாலாற்றை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.
இதற்கு ஆட்சியா் உரிய அனுமதி வழங்கி நிகழ்வை தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





