திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு திங்கள்கிழமையும் அந்தந்த வட்ட அளவிலேயே மக்கள் குறைதீா் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, திங்கள்கிழமை காலை வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, குடும்ப அட்டை, பட்டா, சிட்டா உள்ளிட்ட அரசு நலத் திட்ட உதவிகளைக் கேட்டு 28 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. அதேபோல் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 18 மனுக்கள் பெறப்பட்டன. இரு வட்டங்களிலும் அளிக்கப்பட்ட 46 மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.