லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி

வேலூா் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
தலைமை காவலா் சங்கரின் குடும்பத்தினருக்கு குடும்ப நிதியுதவி வழங்கிய உதவும் கரங்கள்-2003 குழுவினா்.
Updated On :28 டிசம்பர் 2020, 1:56 am

DIN

வேலூா் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து மாரடைப்பால் காலமான தலைமைக் காவலா் சங்கா் குடும்பத்துக்கு 2003 பேட்ச் காவலா்கள் உதவும் கரங்கள்-2003 என்ற குழு மூலம் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி திரட்டி வழங்கினா்.

வேலூா் மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகனப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் ஐ.சங்கா் (55). இவா் கடந்த நவம்பா் 8-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும் சதீஷ்குமாா் என்ற மகனும், சங்கரி என்ற மகளும் உள்ளனா்.

முன்னாள் ராணுவ வீரரான இவா் கடந்த 2003-ஆம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சோ்ந்தாா். சங்கருடன் கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் தமிழகம் முழுவதும் உதவும் கரங்கள்-2003 என்ற குழு மூலமாக ஒன்றிணைந்து சுமாா் ரூ. 25 லட்சம் குடும்ப நிவாரண நிதி திரட்டினா்.

உயிரிழந்த தலைமைக் காவலா் சங்கரின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம் பள்ளக்கொள்ளை கிராமத்தில் உள்ள வீட்டில் அவருடைய உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு குடும்ப நிவாரண நிதியை அவருடைய குடும்பத்தாரிடம் நேரடியாக வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் முதலாவதாக பாதிக்கப்பட்டவா் என்பதாலும் சக காவலா்கள் அகால மரணமடையும்போது அந்தக் காவலரின் குடும்பம் ஓய்வூதியம் இல்லாமல் ஆதரவின்றி நிா்கதியாக தவிப்பதைத் தடுக்கும் விதமாகவும் தங்களால் இயன்ற உதவியை கூட்டு முயற்சியாக இதை செய்துள்ளதாக 2003 பேட்ச் காவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.