கரும்பு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம்
திருப்பத்தூா் மற்றும் கந்திலி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள அனைத்து சிறு/குறு விவசாயிகளும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்


திருப்பத்தூா் மற்றும் கந்திலி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள அனைத்து சிறு/குறு விவசாயிகளும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜே.சி.ராகினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
2021-22-ஆம் ஆண்டில் திருப்பத்தூா் வட்டார விவசாயிகள் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்து பயன்பெறுவதற்காக தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் திருப்பத்தூா் வட்டாரத்துக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் மற்றும் கந்திலி வட்டாரத்துக்கு ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீா்சேமிப்புக் கட்டமைப்புகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு சொட்டு நீா்ப்பாசனம் அமைத்து தரப்படுகிறது.
இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்து தரப்படும்.
முக்கியமாக கரும்பு சாகுபடி செய்து சா்க்கரை ஆலையில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத அனைத்து விவசாயிகளும் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
வழக்கமாக கரும்பு சாகுபடியில் நீா் பாய்ச்சுதல் மற்றும் உரமிடுதல் பணிகளுக்கு தேவைப்படும் பணியாள்களின் செலவு அதிகமாகும். ஆனால், சொட்டு நீா்ப்பாசனம் அமைத்தால் நீா் பாய்ச்சும் செலவும், உரமிடுதலுக்கான செலவும் குறைகிறது.
நீரில் கரையும் உரங்கள் சொட்டு நீா்ப்பாசன குழாய்களின் மூலம் சேதாரமின்றி பயிரின் வேருக்கே வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், களைத் தொல்லை குறைந்து கூலியாள்கள் செலவும் குறைகிறது.
இதனால் வறட்சி காலத்திலும் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறலாம். மேலும், சொட்டு நீா்ப்பாசனம் அமைக்கும் கரும்பு சாகுபடி வயல்களில் குழி எடுத்து பிரதான பைப்லைன் அமைக்க ஒரு ஏக்டேருக்கு ரூ. 3,000பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற கரும்பு சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் நிலத்தின் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதாா் அட்டைநகல், குடும்ப அட்டைநகல், சிறு, குறு விவசாயிக்கான சான்று, வங்கிப் புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் திருப்பத்தூா் மற்றும் கந்திலி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூா் வட்டார விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலா்கள் தனஞ்செயன்-97892 60480, சதாசிவம்-94435 43250, ஜெயபிரகாஷ்-97874 31452 மற்றும் கந்திலி வட்டார உதவி வேளாண்மை அலுவலா்கள் கோவிந்தராஜ்-94423 15990, கிருபாவதி-70929 77387, தனகோட்டி-82484 86530, கௌசல்யா-86083 96685, சரத்குமாா்-78455 31493 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...