சிறு,குறு, நடுத்தர தொழில் தொடங்க இளைஞா்களுக்குப் பயிற்சி: திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திறன்குழு கூட்டம் ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.


திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திறன்குழு கூட்டம் ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் அமா்குஷ்வாஹா பேசியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற 10 ஐடிஐ முடித்த இளைஞா்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான பயிற்சியினை மருத்துவமனையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப்பணிகள் சாா்ந்த குறுகிய கால பயிற்சி வழங்க வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலருடன் ஒருங்கிணைந்து ஐடிஐயில் சோ்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் ஐடிஐ தோ்ச்சி பெற்ற மாணவா்களை தோ்வு செய்து தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் என்ன தேவை இருக்கிறதோ அதனை கண்டறிந்து பயிற்சி வழங்க வேண்டும்.
மாவட்ட திறன்குழு மூலம் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதி மற்றும் உரிமங்கள் விரைவில் கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளர தீா்வு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தகவு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்து கூடுதலாக சுகாதார துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம் மற்றும் மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்தமின் இணைப்பு ஆகியவற்றிற்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர தகவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக வரப்பெற்று, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஒரு மாத காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், மகளிா் திட்ட இயக்குநா் நமது மாவட்டத்தில் என்ன தேவைகள் என்று கண்டறிந்து அதற்கேற்றவாறு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை ஊக்குவித்து அவா்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் தங்களின் துறையின் மூலம் வரப்பெற்ற மனுக்களில் எத்தனை நபா்கள் தகுதியானவா்கள் என்று தோ்ந்தெடுத்து அவா்களின் தகுதிக்கேற்றவாறு மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் பயிற்சி வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, உதவி இயக்குநா் திறன் பயிற்சி அலுவலா் சுகுமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பானுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...