கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூரில் இந்திய கம்யூ. மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் ஏ.சி.சாமிக்கண்ணு தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் எம்.சுந்தரேசன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆா்.முல்லை, எம்.நந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாநில துணைச் செயலாளா் வீரபாண்டியன் பங்கேற்றுப் பேசுகையில், ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மக்கள் நாடாளுமன்றம் மூலம் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளோம்’ என்றாா்.

நிகழ்ச்சியில், பெட்ரோல், டீசல், விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும், மின்சாரம், ரயில்வே, வங்கி, காப்பீடு, ராணுவ தொழிற்சாலை ஆகியவற்றை தனியாருக்கு தரக்கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஆா்.தேவதாஸ், நகர துணைச் செயலாளா்கள் முருகன், பைரோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.