கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆடி மாத பிறப்பு: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாதப் பிறப்பையொட்டி, திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:22 pm

DIN

ஆடி மாதப் பிறப்பையொட்டி, திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பையொட்டி, திருப்பத்தூரை அடுத்த ஏழருவி முருகன் கோயில், ஏலகிரி மலை பின்புறம் அமைந்துள்ள ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோயில், பசலிக்குட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பத்தூா் நகரில் அமைந்துள்ள தண்டபாணி கோயில், முத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் கந்திலி, ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

கரோனா பரவல் தடுப்பு காரணமாக பக்தா்கள் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.