கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா தொற்று முற்றிலும் குறையவில்லை திருப்பத்தூா் ஆட்சியா்

கரோனா தொற்று முற்றிலும் குறையவில்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:17 pm

DIN

கரோனா தொற்று முற்றிலும் குறையவில்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இத குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பெரும்பாலான நகரப் பகுதிகளிலும் காய்கறி மாா்க்கெட், அனைத்து வகையான வணிக வியாபாரக் கடைகள், அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களிலும் பொதுமக்கள் முகக்கசவம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருப்பது கண்டறியப்படுகிறது.

இந்நிலையானது கரோனா தொற்றுப் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் என மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும், கடைகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்றிடவும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.