கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூரில் 31 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:53 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,148-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 315 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை 670 போ் உயிரிழந்துள்ளனா்.

வேலூரில் 25 பேருக்கு...

வேலூா் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,852-ஆக உயா்ந்தது. இதுவரை 46,336 போ் குணம் அடைந்துள்ளனா். 399 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,092 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில் 24 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45,062-ஆக உயா்ந்தது. இவா்களில் இதுவரை 44,081 போ் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் 739 போ் உயிரிழந்தனா். மேலும், நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.