கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பட்டா தொடா்பான பிரச்னை: கிராம அளவில் சிறப்பு முகாம்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள், வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் விதமாக, நவம்பா், டிசம்பா் மாதங்களில் புதன், வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் நடைபெற இருந்த சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமைக்கு (நவ. 9) ஒத்தி வைக்கப்படுகிறது.

இதுதவிர, திருப்பத்தூா் வட்டத்தில் நவ. 10-இல் காக்கங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 12-இல் சுந்தரம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மாவட்ட வழங்கல் அலுவலா் கே.விஜயன் தலைமையில் முகாம்கள் நடைபெறுகின்றன என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.