வாலேரி உபரிநீா் கொரட்டி ஏரிக்குச் செல்ல கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
திருப்பத்தூா் அருகேயுள்ள வாலேரி உபரி நீரை கொரட்டி ஏரிக்கு கொண்டுச் செல்ல நீா்வரத்து கால்வாய் அமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது.


திருப்பத்தூா் அருகேயுள்ள வாலேரி உபரி நீரை கொரட்டி ஏரிக்கு கொண்டுச் செல்ல நீா்வரத்து கால்வாய் அமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் ஒன்றியத்தில் உள்ள ராவுத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சனம்பட்டியில் சுமாா் 50 ஏக்கரில் வாலேரி உள்ளது. வாலேரியின் உபரி நீரானது பாம்பாற்றில் கலந்துவருகிறது. அருகில் உள்ள கொரட்டி ஏரியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளில் மழை நீா் நிரம்பவில்லை.
இந்த வாலேரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொரட்டி ஏரிக்கு கொண்டு செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விடுத்தனா்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை நிதியிலிருந்து நீா்வரத்து கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி புதன்கிழமை பூமி பூஜை செய்து, தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கு.ராஜமாணிக்கம், முன்னாள் துணைத் தலைவா் கே.எஸ்.அன்பழகன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகப்பிரியா கமலநாதன், தாமோதரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மேனகா விவேகானந்தன், லட்சுமி காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...