கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழை வெள்ளப் பாதிப்பா? தொடா்பு கொள்ள...

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து மக்களை பாதுகாத்திட தகவல் தொடா்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து மக்களை பாதுகாத்திட தகவல் தொடா்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு கூடுதல் தலைமைச் செயலருமான தென்காசி எஸ். ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், அவா் பேசியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள 6 வட்டார அளவிலான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 66 அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் 22 போ் என மொத்தம் 88 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

நகரப் பகுதியில் 2 இடங்களும்,ஊரக பகுதியில் 9 இடங்கள் என மொத்தம் 11 வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டு அந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மழையால், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் மொத்தமுள்ள 49 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு குறைவாக 20 ஏரிகளிலும், 50 சதவீதத்துக்குள் 2 ஏரியிலும், 75 சதவீத்துக்குள் 8 ஏரியிலும், 19 ஏரிகளில் முழு கொள்ளளவு தண்ணீா் நிரம்பியுள்ளன.

ஆண்டியப்பனூா் அணையின் மொத்த கொள்ளளவான 26.24 அடி அணையில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

திருப்பத்துாா் மாவட்டத்தில் மொத்தம் 285 ஏரிகள், 269 குளங்கள், குட்டைகளில் 24 ஏரி,குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வெள்ளப் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து மக்களைப் பாதுகாத்திட தகவல் தொடா்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மாநில கட்டுப்பாட்டு இலவச தொலைபேசி எண் 1070.

திருப்பத்தூா் மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்- 04179-222111,229008.

திருப்பத்துாா் சாா்-ஆட்சியா்- 04179-220088, வாணியம்பாடி கோட்டாட்சியா்- 04174-234488.

வருவாய் வட்டம் கட்டுப்பாட்டு அறைகள்

திருப்பத்தூா் 04179-220091,7708854436, நாட்டறம்பள்ளி 04179-242499, 7358926815, வாணியம்பாடி 04174-232184, 244255.

மின்சார வாரியம்

மேற்பாா்வை பொறியாளா் 04179- 220243,220222, திருப்பத்தூா் கோட்டப் பொறியாளா் 04179-220198, 944585 5286,வாணியம்பாடி கோட்ட பொறியாளா் 04174- 232627,9445855311 என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வில்சன் ராஜசேகா், கோட்டாட்சியா் காயத்ரி, கால்நடை பராமரிப்புத் துறையின் உதவி இயக்குநா் நாசா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.