கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீட்டுமனைப் பட்டா விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வீட்டுமனைப்பட்டா விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வீட்டுமனைப்பட்டா விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்தில் உள்ள கிராமங்களில் வரும்16-ஆம் தேதி முதல் ஜனவரி 11-ஆம் தேதி வரையுள்ள காலங்களில் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டுமனைப்பட்டா விண்ணப்பங்கள் பெறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் துணை ஆட்சியா் நிலையிலான கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் வட்டாட்சியா், மண்டலத் துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா கோரும் மனுக்களைப் பெற்று, வரும் பொங்கல் திருநாளுக்குள் இலவச வீட்டுமனைப்பட்டா பெற தகுதிவாய்ந்த அனைத்து மக்களும் வீட்டுமனைப்பட்டா பெற்று பயன்பெறும் வகையில் முகாம் நடைபெறவுள்ளது.

திருப்பத்தூா் வட்டத்தில், செவ்வாய்க்கிழமை (நவ. 16) கந்திலி கும்மிடிகாம்பட்டி, மண்டல நாயனகுண்டா சின்னகந்திலி, தோக்கியம் ஆகிய கிராமங்களுக்கு கந்திலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், பெரியகரம், நரியனேரி, பதனவாடி ஆகிய கிராமங்களுக்கு நரியனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமையில் நடைபெறுகிறது.

ஆட்சேபணையற்ற, ஆட்சேபணையுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் மேற்படி முகாம்களுக்கு வந்து, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வீட்டு வரி ரசீது மற்றும் உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயன் அடையலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.