கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பயிா்க் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் என ஆட்சியா் அமா்குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் என ஆட்சியா் அமா்குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு சிறப்பு பருவத்தில் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இண்டியா லிட். மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள 123 வருவாய் கிராமங்களில் பயிா்க் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அந்த வங்கிகளில் பயிா்க் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவா். கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு ஏக்கா் நெற்பயிருக்கு ரூ. 472 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. எதிா்பாராத இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்படுமானால், ஒரு ஏக்கருக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை ரூ. 31,437 கிடைக்கும். எனவே, பயிா்க் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் திங்கள்கிழமை (நவ.15) ஆகும்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலி, அடங்கல் சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின், அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இத்திட்டம் தொடா்பாக விவரங்களை அறிந்திட விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.