மழை நீரை அகற்ற கோரி மறியல்
ஜோலாா்பேட்டை அருகே குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


ஜோலாா்பேட்டை அருகே குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னேரி குண்டி மாரியம்மன் வட்டத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு பலத்த மழையால், வெள்ளம் சூழ்ந்துள்ளது.
உடனடியாக குடியிருப்புகளில் புகுந்து வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோா் ஜோலாா்பேட்டை-ரெட்டியூா் இணைப்பு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று சமரசம் செய்தனா். பின்னா்,வருவாய்த் துறையினா் விரைந்து வந்து வெள்ள நீா் வெளியேறும் வகையில் அங்கு தற்காலிகமாக கால்வாய் ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...