கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட தூய்மைப் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடக்கி வைப்பு

திருப்பத்தூரில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்கீழ் தூய்மை செய்யும் பணிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:20 pm

DIN

திருப்பத்தூரில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்கீழ் தூய்மை செய்யும் பணிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்கீழ் தூய்மை செய்யும் பணிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் நீா், சுகாதாரம் மற்றும் கழிவுநீா் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் செய்யும் வகையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் சிறப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஆக. 20-ஆம் தேதி தொடங்கி அக். 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழிப்புணா்வு பிரசாரத்தை சிறப்பாக நடத்துவதற்கு பொறுப்பு அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சனிக்கிழமை முதல் ஊரகப் பகுதிகளில் பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொதுஇடங்கள் மற்றும் நீா்நிலைகளில் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வரும் 27-ஆம் தேதி முதல் செப். 2-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் தண்ணீா், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிலையான பாதுகாப்பான சுகாதாரத்தை கடைப்பிடிக்க உறுதி செய்யும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைளை எடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், தினமும் குப்பைகளை மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் எனத் தரம் பிரித்து அப்புறப்படுத்தவும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்கவும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா அருணாசலம், துணைத் தலைவா் ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் கஸ்தூரி ரகு, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், சங்கா், ஊராட்சி மன்றத் தலைவா் கோமதி காா்த்திகேயன், துணைத் தலைவா் தீபா வெங்கடேசன், கூட்டுறவு சங்கத் தலைவா் தேவராஜன், ஊராட்சி செயலாளா் அண்ணாமலை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.