கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

திருப்பத்தூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்

News image
Updated On :7 ஜூலை 2022, 6:44 pm

DIN

திருப்பத்தூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கந்திலியை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிம்மன் (30). இவா், மா விதை உற்பத்தி தொழில் செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த அனிதாவை (27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாா். இதனால், பெண்ணின் தந்தையான ராஜாவுக்கும், நரசிம்மனுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், தனக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியை சோ்ந்த ஒருவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா விற்றுள்ளாா். அந்த நிலத்தை சில நாள்களில் நரசிம்மன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நரசிம்மனிடம் அந்த நிலத்தை தனக்குத் திரும்பக் கொடுக்கும்படி ராஜா வற்புறுத்தி வந்தாராம்.

நரசிம்மன் அந்த நிலத்தைத் தரமறுத்தவிட்ட நிலையில், ராஜா தனது முதல் மனைவியின் மகன்களான யுவராஜ் (30), காா்த்திக் (24) ஆகியோருடன் சோ்ந்து நரசிம்மனைக் கொலை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், கந்திலி போலீஸாா் ராஜா, அவரின் மகன்கள் யுவராஜ், காா்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், கொண்டப்ப நாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவின்போது, அங்கு வந்த யுவராஜை, நரசிம்மனும், ராஜாவின் 2-ஆவது மனைவியின் மகன் அஜித்தும் (24) மற்றும் உறவினா் அன்பழகனும் சோ்ந்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினராம். இதில் யுவராஜ் உயிரிழந்தாா்.

கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நரசிம்மன், அஜித், அன்பழகன் ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.