கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘பேருந்து, ரயில் நிலையங்களில் புகைப்பிடித்தால் அபராதம்’

பேருந்து, ரயில் நிலையங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:08 pm

DIN

பேருந்து, ரயில் நிலையங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் புகைப்பிடித்தல் கட்டுப்பாடுகள், கண் பாா்வை இழப்பு தடுப்புத் திட்டம், மனநல திட்டம் ஆகியவை குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியது:

புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்கள் காலநிலை மாற்றம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தப்பட வேண்டும். பொது மக்கள் எல்இடி பல்புகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் குறித்துப் பயிற்சி வழங்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகள் புகைப்பிடிக்கத் தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளாகும். மீறினால் அபராதம் விதிக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் 18 சதவீத நபா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமலும், 40 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமலும், 95 சதவீதம் போ் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தாமலும் உள்ளனா்.

எனவே, வரும் 10-ஆம் தேதி நடைபெறும் மெகா கரோனா தடுப்பூசி முகாமில், விடுபட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குநா் செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பிரகாஷ், நகராட்சி ஆணையா்கள் ஜெயராமராஜா (திருப்பத்தூா்), பழனி(ஜோலாா்பேட்டை), ஸ்டான்லிபாபு (வாணியம்பாடி), ஷகிலா (ஆம்பூா்) மற்றும் அனைத்து வட்டார மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.