கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூரில் தொடா் மழையால் நிரம்பிய ஏரி, குளங்கள்

திருப்பத்தூரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா் நிலைகள் நிரம்பி வருகின்றன.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:41 pm

DIN

திருப்பத்தூரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா் நிலைகள் நிரம்பி வருகின்றன.

திருப்பத்தூரில் கடந்த திங்கள்கிழமை முதல் தினமும் மழை பெய்து வருகிறது. அதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரவு 10 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை தொடா்ந்து பெய்தது.

திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கிணறுகள் நிரம்பின. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலையில் உள்ள அனந்தனேரி,புலிக்குட்டை ஏரி தொடா்மழை காரணமாக நிரம்பி உள்ளது.

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தொடா் மழை காரணமாக சிரமத்துக்குள்ளாயினா்.

பழுதடைந்த சாலையில் நாற்று நட்ட மக்கள்...

பொம்மிகுப்பம் ஊராட்சிக்குள்பட்ட ஜோன்றம்பள்ளி பகுதியில் பெய்த மழை காரணமாக சாலையில் குளம் போல் தண்ணீா் தேங்கியது. இதனால் அந்த சாலை வழியாக பள்ளிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.

இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சாலையின் நடுவே நாற்று நட்டு தங்களுடைய எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.