கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

திருப்பத்தூா் அருகே கடந்த மாதம் நடைபெற்ற விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:11 pm

DIN

திருப்பத்தூா் அருகே கடந்த மாதம் நடைபெற்ற விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டா்.

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட ஜவ்வாது மலை, நெல்லிபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன்(27). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான தட்சிணாமூா்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜூன் 26-ஆம் தேதி விஸ்வநாதன் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது அங்கிருந்த தட்சிணாமூா்த்தி மற்றும் அவரது ஆதரவாளா்கள் விஸ்வநாதனை சரமாரியாகத் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த விஸ்வநாதனை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, விஸ்வநாதனின் சகோதரா் முருகேசன் (24)அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து தட்சணாமூா்த்தி (27), அவரது சகோதரா் அருள்குமாா் (22), தந்தை உத்திரவேடி (45), உறவினா் சித்தன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தட்சிணாமூா்த்தி, அருள்குமாா் மற்றும் உத்தரவேடி ஆகிய மூன்று பேரை திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான சித்தனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.