கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழில் முனைவோா் ரூ. 75 லட்சம் மானியத்துடன் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 75 லட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :28 ஜூலை 2022, 7:10 pm

DIN

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 75 லட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும் முதல் தலைமுறை தொழில் முனைவோா் நிறுவனங்களைத் தொடங்கவும் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (சஉஉஈந) அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம்(பன்னிரெண்டாம் வகுப்பு தோ்ச்சி) மற்றும் பட்டய தொழிற்கல்வி தோ்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோா் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருத்தல் வேண்டும்.

சிறப்பு பிரிவினா்களான மகளிா், ஆதி திராவிடா், பழங்குடியினா்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.

அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்கள் தொடங்க இத்திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 5 கோடி வரை கடன் பெற்று, 25 சதவீத அதிகபட்ச மானியம் ரூ. 75 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம்/ பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணைய் அரைக்கும் ஆலை, லேத் இயந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பிரிண்டிங் இயந்திரங்கள் மற்றும் சேவை சாா்ந்த தொழில்களும் தொடங்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நோ்முகத்தோ்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினா் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினா் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ங்ங்க்ள்

என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்டத் தொழில் மையம், 86/5, எழில் நகா், திருப்பத்தூா் என்ற முகவரியை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.