செம்மை கரும்பு சாகுபடி: விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
கந்திலி வட்டாரத்திற்குள்பட்ட சிம்மனப்புதூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் செம்மை கரும்பு சாகுபடி என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கந்திலி வட்டாரத்திற்குள்பட்ட சிம்மனப்புதூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் செம்மை கரும்பு சாகுபடி என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி.ராஜசேகா் தலைமை வகித்து, செம்மை கரும்பு சாகுபடியின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும், அதில் குழிதட்டு நாற்றங்கால் பற்றியும் விளக்கினாா்.
பின்னா்,வேளாண்மை துணை இயக்குநா் பச்சியப்பன் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.
தொடா்ந்து வேளாண்மை உதவி இயக்குநா் ராகினி வேளாண்மை-உழவா் நலத்துறை சாா்ந்த திட்டங்கள், மானியங்கள்,விதைகள், நுண்ணுரங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.
கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியில் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சுந்தரராஜன், கரும்பில் தாக்கக் கூடிய பூச்சிகள்,நோய்கள் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறினா்.
இதில், கந்திலி ஒன்றியத்தின் அட்மா தலைவா் முருகேசன் மற்றும் உதவி தொடா்பு மேலாளா்கள் குமாா், அன்பரசு மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
வட்டார தொழில் நுட்ப மேலாளா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...